மட்டு மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கைக்- கென 160 கோடி ரூபா பெறுமதியான உரம் மானியம்
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கைக்கென 160 கோடி ரூபா பெறுமதியான உரம் மானியமாக வழங்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் டொக்டர் ஆர். ருசாங்கன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெல்லாவெளி கொக்கடிச்சோலை வவுணதீவு,செங்கலடி, கிராண், வாகரை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 17 விவசாய பிரிவுகளிலும், இவ்வுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உரம் 350 ரூபாவிற்கே விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு மூன்றரை மூடை உரம் வீதம் வழங்கப்படுகிறது. இலவச உர விநியோகம், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆர். ருசாங்கன் தலைமையில் வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment