Friday, December 16, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (16) பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றில் அவை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் போது அரச பாதுகாப்பு படையினர் செயற்பட்ட விதம் குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதியால் நியாமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசின் பாதுகாப்பு படையினர் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறவில்லை என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் யுத்த சூனிய வலயத்தில் அரச பாதுகாப்பு படையினர் அநாவசியமாக பொது மக்களை இழக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை எனவும் , எனினும் யுத்த வலயத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளும் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பொது மக்கள் சிலர் கொல்லப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழு ஒப்புக் கொண்டுள்ளது.

புலிகளின் பகுதிகளில் இருந்து அரச பாதுகாப்பு படையினர் உள்ள பகுதிகளுக்குச் சென்ற மக்கள் மீது புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தியதாகவும், கண்ணிவெடிகளைப் புதைத்து வீதித் தடை விதித்ததாகவும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தெரிவிக்கிறது.

தேசிய பிரச்சினைகளுக்கு கட்சி பேதங்கள் இன்றி முன்னிலைப்பட வேண்டியது அவசியம் எனவும், இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் வெளியான காணொளிகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com