முன்னாள் புலி உறுப்பினர்கள் 14 பேருக்கு ஒரு வருடம் புனர்வாழ்வளிக்குமாறு உத்தரவு
இறுதிக் கட்ட யுத்தத்தில் அரச படைகளிடம் சரணடைந்த புலிகள் இயக்கத்தின் 14 உறுப்பினர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிரவாத ஒழிப்புப் பிரிவினருக்கு நீதிமன்றத்தால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சரணடைந்த பின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் பூஸா முகாமில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 14 பேரும் புலிகள் இயக்கத்தில் ஆயுத பயிற்சி பெற்றிருக்கின்ற போதும் பலாத்காரமாகவே இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்து குறிப்பிட்டுள்ளனர்.
அதனால் இவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு சட்ட மா அதிபர் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தமது அறிக்கையில் கூறியுள்ளனர்.
இக்கருத்துக்களை பரிசீலித்த நீதவான் குறித்த 14 பேரையும் வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து ஒரு வருடம் புனர்வாழ்வளிக்குமாறு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment