வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 14 காம் ஆண்டு நிறைவு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசனின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார்.
இவ்விழாவில் பல கலை இலக்கிய நிகழ்ச்சிகள் அரங்கேறியதோடு மாருதம் சஞ்சிகையின் 12வது இதழ் வெளியீட்டு வைக்கப்பட்டது.அத்துடன் 'பள்ளிக்கூடம்' குறும்;பட இயக்குனர் திரு. கந்தையா ஸ்ரீ கந்தவேள் எழுதிய 'கருவறையில் இருந்து' என்ற நாடக நூலும் செல்வி. நந்தீஸ்வரி துரைராசா எழுதிய 'உயிர்க்கும் விழுதுகள்' எனும் கவிதை நூலும் வெளியீட்டு வைக்கபட்டது.
விழாவில் கலை இலக்கியத்துக்கு பணியாற்றிய சான்றோர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதில் கவிதைத்துறையில் 'கலை செல்வர்' விருதினை அமரர் 'கவிஎழில்' கண்ணையா அவர்களுக்கும் ஊடகத்துறையில் 'கலை செல்வர்' விருதினை மறைந்த ஊடகவியலாளர் அமரர் தம்பு விவேக ராசா அவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
விழாவின் சிறப்பு அம்சமாக கலாநிதி.தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு அரசாங்க அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
No comments:
Post a Comment