கடுகதி வீதி சட்டங்களை மீறிய 141 பேருக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தென்னிலங்கை கடுகதி வீதியில் வீதி சட்டங்களை மீறிய 141 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். இடது பக்கமாக வாகனத்தை செலுத்தாமை, கூடுதலான வேகத்தில் பயணித்தமை உள்ளிட்ட வீதி சட்டங்களை மீறியமையினால், இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கிறார்.
இத்தினங்களில் நிலவும் சீரற்ற காலநிலையை தொடர்ந்தும் குறிப்பிட்ட வேக எல்லையை தாண்டி செல்லும் பட்சத்தில், விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், அவர் தெரிவிக்கிறார், ஒரே தினத்தில் கூடுதலான வேகத்தில் பயணித்த 11 வாகன சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கிறார்.
தென்னிலங்கை கடுகதி வீதியில் பயணிக்கும்போது, கட்டாயமாக இடதுபக்க மருங்கில் பயணிக்க வேண்டும். அத்துடன் இரு வாகனங்களுக்கிடையிலான இடைவெளியை பேணுமாறும், பொலிஸார், சாரதிகளை கேட்டுள்ளனர். கடுகதி வீதியில் குறிப்பிட்ட வேகத்தை தாண்டிச்சென்ற வாகனங்களே, விபத்துக்குள்ளாகியதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment