துணை மருத்துவ சேவை பயிலுநர்களுக்கு மாதாந்தம் 12000 ரூபா கொடுப்பனவு.
துனை மருத்துவ சேவை பாடநெறியை மேற்கொள்ளும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழில்சங்க நடவடிக்கைகளின் ஊடாக நோயாளர்களை சிரமத்திற்குட்படுத்த வேண்டாமென சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
துணை மருத்துவ சேவை பாடநெறியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதாந்தம் 12 ஆயிரத்து 360 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர். துனை மருத்துவ சேவை தொழில்சங்கங்களின் கோரிக்கையாக இருந்த 2006 , ஆறாம் இலக்க பொது நிருவாக சுற்று நிருபத்தை சீர்திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தவிர துனை மருத்துவ சேவை கூட்டு முன்னணியின் கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கும் துரித தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலைமையில் தொழில்சங்க நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாமென சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment