புனர்வாழ்வளிப்பு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்காக வருகைத் தந்தனர்.
பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை பார்வையிடவென புனர்வாழ்வளிப்பு முகாம்களில், புனர்வாழ்வளிக்கப்பட்டு வரப்படும் முன்னாள் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 104 பேரே இன்று பாராளுமன்றிற்கு வருகைத் தந்திருந்தனர்.
2012 வரவு செலவும் திட்டத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தொடர்பில் இன்று குழு நிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவும் இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கான விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment