Monday, December 19, 2011

மட்டு மாவட்டத்தில் 1181 பேர் டெங்கினால் பாதிப்பு. ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால், ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதார சேவைகள் அத்தியட்சகர் டொக்டர் எஸ். சதுர்முகம் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமைய, டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் பிரதேச மட்ட சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி பிரிவுகள் தோறும் தீவிரமாக அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு பரிசோதனைகள், ஆலோசனை வழங்கும் நடவடிக்கைகள், தீவிரமாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தின் டெங்கு நோயாளர்களாக ஏறாவூரில் 481 பேரும், மட்டக்களப்பு பிரிவில் 174 பேரும், காத்தான்குடியில் 55 பேரும், இனங்காணப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் இவ்வருடம் செங்கலடி ஏறாவூர் பிரிவுகளில் தலா இரண்டு பேர் வீதமும், களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, கோறளைப்பற்று மத்தி, மட்டக்களப்பு ஆகிய சுகாதார பிரிவுகளில் தலா ஒருவர் வீதமும், மரணத்தை தழுவியிருப்பதாக, பிராந்திய வைத்திய அதிகாரி டொக்டர் எஸ். சதுர்முகம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment