Tuesday, December 6, 2011

ராஜ் ராஜரட்ணத்திற்கான சிறைக் கதவு திறந்தது. 11 வருடங்கள் உள்ளே!

புலி ஆதரவாளரான கோடிஸ்வர வர்த்தகர் ராஜ் ராஜரத்தினத்திற்கான 11 ஆண்டு கால சிறைவாச காலம் ஆரம்பமாகியுள்ளது. மெஸச்சுசெட்ஸ் சிறைச்சாலையில் அவர் சிறைவாசம் அனுபவிக்கின்றார். இந்த சிறைச்சாலை நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவவைப்படுவோரை தடுத்து வைக்கும் சிறைச்சாலையாகும் . ராஜ் ராஜரத்தினம் ஒரு நீரிழிவு நோயாளியாவார். அவர் சிறுநீரக மாற்று சந்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்படவுள்ளார்.

அமெரிக்க பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிக்காக இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் அமெரிக்க நீதிமன்றத்தினால் இவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார். இதன் அடிப்படையில் ராஜ் ராஜரத்தினத்தின் சிறைவாச காலம் நேற்று முதல் ஆரம்பமாகியது. சிறை வாசம் அனுபவிப்பதற்கு முன்னர் நீதிமன்றத்தினால் நிதியாக்கப்பட்ட பல மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அவர் செலுத்த வேண்டி ஏற்பட்டது. இதன் அடிப்படையில் அமெரிக்க பங்குச்சந்தையில் மேற்கொள்ளப்பட்ட மோசடிக்கென 92.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஏனைய குற்றச்சாட்டுக்களுக்கென 63.8 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அபராதமாக செலுத்த வேண்டி ஏற்பட்டது.

No comments:

Post a Comment