மீனவர்களின் 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் வேலைத்திட்டம் ஆரம்பம்
மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மீனவர்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பாகவும் மகஜர் ஒன்றில் பத்து இலட்சம் கையெழுத்துக்களை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று இன்று நீர்கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த கையெழுத்து பெறும் வேலைத் திட்டத்தை 'மீன் பிடித் தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேசிய மீனவர் கூட்டமைப்பு' ஏற்பாடு செய்திருந்தது.
நீர்கொழும்பு கொட்டுவ திறந்த மீன்பிடிச் சந்தை முன்பாக இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த கையெழுத்து பெறும் வேலைத்திட்டம் ஆரம்பமானது.
'மீன் பிடித் தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேசிய மீனவர் கூட்டமைப்பின்' தேசிய அமைப்பாளர் நாமல் பெர்னாந்து இதுதொடர்பாக தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு கடற் பகுதியில் இந்திய மீன்பிடி ரோலர் படகுகள் மேற்கொள்ளும் சட்ட விரோத மீன் பிடித்தல் நடவடிக்கை தொடர்பாகவும் , இ;லங்கை மீனவர்களின் மீன் வலைகள் இந்திய ரோலர் படகுகளினால் சேதமடைதல் தொடர்பாகவும், இவற்றுடன் மீனவர்கள் எதிர் நோக்கும் மேலும் பல பிரச்சினைகள் தொடர்பாகவுமே, மகஜரில் 10 இலட்சம் கையெழுத்துப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு காரணம் என்றார்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment