நீர்கொழும்பு நகர மத்தியில் வர்த்தக பகுதியில் பாதசாரிகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் தற்காலிக நடைபாதை கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்த வியாபரிகள் பத்து பேரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 1500 ரூபா ரொக்கப்பிணையலும் ,தலா இரண்டு இலட்சம் ரூபா கொண்ட நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் நபர்களின் சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய (நேற்று)புதன்கிழமை (14.12.11)உத்தரவிட்டார் .
அத்துடன் அ;ந்த வர்த்தகர்கள் நடத்தி வந்த தற்காலிக் கடைகளையும் உடனடியாக அகற்றுமாறு நீதிபதி ஏ.ஏம்.என் .பி.அமரசிங்க உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகிலிருந்து தில்லந்தூவ பகுதி வரையான வீதியோரத்தில் பண்டிகைக்கால வியாபாரம் நடத்துவதற்காக நீர்கொழும்பு மாநகர சபையினால் தற்காலிகமாக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளின் வியாபாரிகள் சிலரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.
இவர்கள் காலி,மாத்தறை,பொலன்னறுவ ,அம்பாந்தோட்டை,ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வியாபரிகளாவர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பிரிவினர் குறித்த வர்த்தகர்களை கைது செய்து மன்றில் ஆஜர் செய்தனர்.
பாதசாரிகள் பயணிப்பதற்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் (அப்பகுதியில்உள்ள தெருமருங்கை) தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரம் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த வியாபாரிகள் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய நேற்று இரவு கடைகள் அகற்றப்படுவதை படங்களில் காணலாம்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment