Monday, December 19, 2011

களுத்துறை -அலுத்கம வரையான ரயில் பாதைகளை ஜனவரி 1 முதல் தற்காலிகமாக மூட தீர்மானம்

புனரமைப்பு பணிகளுக்காக களுத்துறை முதல் அலுத்கம வரையிலான ரயில் பாதைகளை ஜனவரி முதலாம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திட்ட பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம மற்றும் ரயில்வே பொது முகாமையாளர் பீ.ஏ.பி ஆரியரத்ன ஆகியோரின் ஆலோசனையின் பிரகாரம் களுத்துறை முதல் அலுத்கம வரையிலான 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தண்டவாளங்கள் போடப்படவுள்ளன. இதனால் ஜனவரி முதலாம் திகதி முதல் களுத்துறைக்கும் அலுத்கமைக்கும் இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து களுத்துறைக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றடையலாம்.

ஏப்ரல் 10 ஆம் திகதியளவில் கரையோர ரயில் பாதை களுத்துறையிலிருந்து மருதானை வரைக்கும் நிர்மாணிக்கப்பட்டு விடும்.

இதனையடுத்து மாத்தறையிலிருந்து மருதானைக்கு முழுமையாக ரயில் சேவையை நடத்துவதே ரயில்வே திணைக்களத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.

ஏப்ரல் 10 ஆம் திகதி ஆகும் போது அதிவேக ரயில்பாதை ஊடாக மருதானையிலிருந்து மாத்தறைக்கு 2 மணித்தியாலங்களில் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment