Friday, November 25, 2011

அரச விரோத ஆர்பாட்டங்களுக்கு தயாராகும் UNP, JVP, TNA யினர் ரகசிய பேச்சுவார்த்தைகளில்.

அரசாங்கத்திற்கு விரோதமான ஆர்ப்பாட்டங்களை நாடு பூராகவும் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சரத் பென்சேகாவை விடுதலை செய்தல், அரச நிறுவனங்களை சுவீகரிப்பதை தடுத்தல், மக்களுக்கான சலுகை, ஜனநாயகம் சட்டம் மற்றும் சமாதானம் ஆகிய பொதுவான விடயங்கள் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பொதுவான வரையறைகள் பற்றி அந்த பேச்சுவார்த்தைகளின் போது ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஐ.தே.க.வின் சார்பில் ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர் மக்கள் விடுதலை முன்னணி , தமிழ் தேசிய கூட்டமைப்ப சார்பில் கலந்து கொள்ளவுள்ளோர் தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment