Tuesday, November 1, 2011

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை முறியடித்து பாலஸ்தீனா UNESCO வின் உறுப்புரிமையை பெற்றது

யுனெஸ்கோவில் பாலஸ்தீனம் முழு நேர உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்துடன் அமெரிக்கா வழங்கும் பல ஆயிரம் கோடி டாலர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. ஐ.நா.,கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவில் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் பாலஸ்தீனம் உறுப்பினராக கடும் முயற்சியை மேற்கொண்டு வந்தது. இதற்கு இந்தியா உள்பல பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் இங்கு நடந்த ஓட்டெடுப்பில் பாலஸ்தீனத்திற்கு போதிய ஆதரவு ( 107 ஓட்டுக்கள் ) விழுந்தன, மொத்தம் இந்த அமைப்பில் 173 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

இந்த வெற்றிக்கு பாலஸ்தீன மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அமெரிக்ககா மற்றும் இஸ்ரேல் கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக நவம்பர் மாதம் வழங்க வேண்டிய 60 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா நிறுத்த முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆண்டு முழுவதும் வழங்கும் மொத்த தொகையான 80 பில்லியன் டாலர் தொகையை நிறுத்திக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. யுனெஸ்கோவிற்கு கிடைக்கும் நிதியில் அமெரிக்கா பெருமளவில் ( 45 சதம் வரை ) தரும் நாடாக இருந்துள்ள வேளையில் இது பெரும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் வாய்ப்புகளை இது பாதிக்கும் என்று இஸ்ரேல் தனது எதிர்ப்பு கருத்தை வெளியிட்டுள்ளது. மேலும் சர்வதேச சமுதாயம் அமைதி வழிமுறையைமுன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு எதிராக இருக்கும் என்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com