தடை செய்யப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு சொந்தமான பணம், எல்ரிரிஈ பயங்கரவாதிகளிடம் வழங்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், 5 பேரை கைது செய்வதற்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் 5 முக்கிய செயற்பாட்டாளர்களை கைது செய்வதற்கு, கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. இவர்களுள் ஒரு முக்கிய சூத்திரதாரி வெளிநாடு சென்றுள்ளதாகவும், தெரிய வருகிறது. அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு, விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக, ரகசிய பொலிஸார், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி மீண்டும் இடம்பெறுமென, மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர தெரிவித்தார். அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும், அவர் உத்தரவிட்டார். தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கு கிடைத்த நிதியை, எல்ரிரிஈ இயக்கத்தின் ஆயுத கொள்வனவுக்கு பயன்படுத்தியதாக, டி.ஆர்.ஓ. அமைப்புக்கு எதிராக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment