Tuesday, November 1, 2011

வெளிநாடுகளுக்கு சென்று புறம் பேசுவதை தவிருங்கள். TNA க்கு GL அறிவுரை.

பிரச்சினைகள் இருந்தால் பேச்சுவார்த்தைகள் மூலம் தாயக பூமியிலிருந்து தீர்த்துக் கொள்வதன்றி வெளிநாடுகளுக்கு சென்றுபுறம்பேசுவதன் மூலம் அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாதென அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்பீரிஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு சென்றிருப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றது. இறுதியில், இப்பிரச்சினைகளுக்கு, எமது நாட்டினுள்ளேயே, தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாடுகளில், தலைநகரங்களுக்குசென்று, அந்த அரசாங்கங்களை அறிவுறுத்தி, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

நாட்டில் உள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி, இந்நாட்டின் பாராளுமன்றத்தினூடாக, தேவைப்பட்டால், அரசியலமைப்பை சீர்த்திருத்தி, இந்நாட்டுக்குள் எடுக்க வேண்டிய முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். வெளிநாட்டு அழுத்தங்களினால், அவற்றை சாதிக்க முடியாது

மேலும் ஜனாதிபதியின் அவுஸ்திரேலிய விஜயத்தின் மூலம் நாடு பல குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் வெளியுறவு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் எமது வெளிநாட்டு கொள்கையின் வெற்றிகரமானதன்மை இதனூடாக வெளிகாட்டப்படுவதாக தெரிவித்தார்.

பிரதான மூன்று வெற்றிகளை, நாம் இந்த விஜயத்தினூடாக, பெற்றுக்கொண்டோம். 2013 ஆம் ஆண்டு பொதுநலவாயமாநாட்டை, இலங்கையில் நடாத்துவதற்கு, ஏகமனதான தீர்மானத்தை பெற்றுக்கொண்டமை. எமதுநாட்டில் உள்நாட்டு பிரச்சினைகளை உருவாக்குவதற்கு, கனடா மேற்கொண்ட முயற்சிகளை, நாம் முற்றாக தோல்வியடையச் செய்தோம். அதிமேதகு ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்டஒரு அடிப்படையற்ற வழக்கை, சமர்ப்பித்த சந்தர்ப்பத்திலேயே, அதனை தோல்வியடையச் செய்வதற்கு முடிந்தது.

இந்த மூன்று விடயங்களில், ஒரு விடயம் வெற்றியளித்திருந்தாலும், நாம் பெரு வெற்றியடையந்ததாகவே, கருத முடியும். ஆனால்,மூன்று விடயங்களிலும் நாம் வெற்றியடைந்தோம். இலங்கையின் வெளிநாட்டு கொள்கை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு கொள்கை, ஆகியவற்றில் ஏற்பட்ட பாரியவெற்றியாகவே, நாம் இதனை கருதுகின்றோம்.

No comments:

Post a Comment