சிங்கள வர்த்தர்களை இடையூறு செய்வதை தவிர்த்து LTTE யின் சொத்துக்களை கைப்பற்றுவீர்.
சிங்கள வர்த்தகர்களின் வியாபாரங்களை கைப்பற்றுவதற்கான சட்டங்களை கொண்டுவருவதை விடுத்து அரசாங்கம் எல்ரிரிக்கு சொந்தமான யாவற்றையும் கைப்பற்றுவதற்கான நடவடிக்களை மேற்கொள்ளவேண்டுமென எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுனர்களின் மனைவிமார் சங்கம் சங்கத்தினரை ஐ.தே.க தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் சந்தி த்த நிகழ்வொன்றில் பேசிய அவர் மேற்காண்டவாறு தெரிவித்ததுடன் தொடர்ந்து பேசுகையில் , யுத்தகாலத்தின்போது புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை உரியவர்களிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்நிதி உத வியாக இருக்கும், அத்துடன் புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் , கப்பல்கள் என்பவற்றுடன் கே.பி யிடம் 600 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் என்பன உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment