இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக, எவரும் கூறினால், அதுதொடர்பாக இடம்பெறும் விசாரணைகளுக்கு தான் பூரண ஆதரவு வழங்கப் போவதாக, ஜே.வீ.பீ தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் கார்த்திகை வீரர் தின வைபவங்களில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பா சென்றுள்ள அவர் பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகக் கண்டறிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் எந்தவித நம்பிக்கையுமில்லையென்றும், அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment