JVP க்கு பிழைத்த இடங்களில் பொன்சேகாவுடன் இணைந்ததும் ஒன்றாம். அனுர குமார
ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணி மூன்று தடவைகள் தவறுகளை விட்டுள்ளதாகவும் அவற்றில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அரசியல் ஆதரவு வழங்கியமையும் ஒன்று என ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலிநகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, 2004 ஆண்டு சந்திரிகா குமாரணதுங்க வுக்கும் , 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்கவிற்கும், 2009 சரத் பொன்சேகாவிற்கும் அரசியல் ரீதியா ஆதரவு வழங்கியமை தமது கட்சி விட்ட தவறுகள் என்பதை தாம் இப்போது உணர்ந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது கட்சியிலிருந்து சிறிய குழுவொன்று பிரிந்து நின்று புலம்புவதாகவும், எழுதுவதாகவும் தெரிவித்த அவர் இச்செயற்பாடுகள் தம்மை ஒன்றும் செய்யாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேற்படி கருத்து தொடர்பாக கேலி செய்துள்ள ஜேவிபி யின் முன்னாள் பிரச்சார பீரங்கியும் தற்போதைய அரசில் அமைச்சருமாகிய விமல் வீரவன்ச, இவர்கள் இன்னும் சிறிது காலத்தில் வந்து தாம் இப்போது செய்கின்றவிடயங்கள் தவறனது என்பதை தற்போதே உணர்ந்துள்ளோம் என்று சொல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தர வாதம் என கேலி செய்துள்ளார்.
இதேநேரம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வை அரசியினுள் இழுத்து அவரை நடுத்தெருவில் விட்டது ஜேபிவி என்ற மிகுந்த அதிருப்தி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை உணர முடிகின்றது.
0 comments :
Post a Comment