துமிந்த சில்வாவை கைது செய்ய தயார்- இரகசிய பொலிசார்.
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து தற்போது வெளிநாடொன்றில் சிகிச்சை பெற்றுவரும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்வது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ள்து. சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனையின்படி துமிந்த சில்வாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாரத ரக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய வரப்பிரசாதங்களை பாதுகாக்கும் வகையில் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை துமிந்த சில்வாவை கைது செய்யும் விடயத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment