Tuesday, November 15, 2011

த.தே.கூ வின் பணவசூலிப்பு மோசடியை சிங்கள ஊடகங்களுக்கும் தெரிவித்தார் மனோ கணேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது புலம்பெயர் தமிழர்களிடம் ஈழத் தமிழர்களை விற்றுப் பிழைப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை புலம்பெயர் மக்களிடம் எடுத்துக் கூறப் போவதாகக் கூறிக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு டிக்கட் விற்பனை செய்து அதன் மூலம் கூட்டமைப்பு பணம் கறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு என புலம்பெயர் தமிழர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இவ்வாறு பெற்றுக் கொள்ளும் பணத்தை அவர்கள் தங்களின் பக்கற்களிலேயே போட்டுக் கொள்கிறனர்.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் வெளிநாடு சென்றிருந்த போது அங்கு வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 75 அமெரிக்க டாலர்களை அறவிட்டுக் கொண்டனர் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் என லங்கா சீ நியூஸ் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. Opportunism has a long history.Opportunists making use an opportunity,especially to get advantage for themselves.We have to learn more and more to study them,but
    unfortunately they remain in the society.You cannot wipe them out.

    ReplyDelete