சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக ஏழாயிரம் முறைப்பாடுகள்!
சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இந்த ஆண்டில் இதுவரையில் 7000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
சிறுவர்கள் பெற்றோர்களினாலோ, பாதுகாவலர்களினாலோ அல்லது நன்கு தெரிந்தவர்களினாலோ துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக அதிகமாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகக் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளதோடு, அரசியல் தொடர்புடைய சிலரும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அரசியல் அழுத்தம் காரணமாக இவ்வாறான சம்பங்கள் அம்பலப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய சிறுவர் அதிகார சபையின் பொலிஸ் பிரிவுக்கு 05 புதிய புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் என்.கே.இலங்ககோன் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சிறுவர் அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment