Thursday, November 24, 2011

ஜப்பானில் அணுஉலை வெடித்த இடத்தில் மீண்டும் நில நடுக்கம்

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இதில் புகுஷிமா நகரில் உள்ள அணுஉலை வெடித்து விபத்து ஏற்பட்டது. சுனாமி தாக்கியதாலும், நிலநடுக்கத்தாலும் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அணுஉலை வெடித்த இடத்தில் இன்னும் கதிர்வீச்சு உள்ளது. அந்த அணுமின் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு நிலநடுக்கம் 5.9 புள்ளியாக பதிவாகி இருந்தது. பூமிக்கடியில் 37 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்க மையம் இருந்தது. இதனால் சுனாமி ஏற்படலாம் என கருதப்பட்டது. ஆனால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா? என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இதேபோல கிரீஸ் நாட்டுக்கு தெற்கே உள்ள தீவு கூட்டங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 5.3 புள்ளியாக பதிவாகி இருந்தது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கிரீஸ் நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment