சேதமாக்கப்பட்ட சமயத்தலங்களை புனரமைப்பதற்கு விசேட திட்டம் - பிரமர் தெரிவிப்பு
பயங்கரவாதத்தினால் சேதமாக்கப்பட்ட சமயத்தலங்களை புனரமைப்பதற்கு விசேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மதத் தளங்களையும் அபிவிருத்தி செய்யும் தேசிய திட்டத்திற்கு சமாந்திரமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள சமய தலங்களை புனரமைப்பதற்கான நிதி வழங்கும் வைபவம் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. முன் எப்போதையும் விட தற்போது நாட்டில் சமயப் புரட்சியொன்று ஏற்பட்டுள்ளதாக பிரதமர் இங்கு தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment