Wednesday, November 2, 2011

பாரத லக்ஷ்மனின் கொலைச் சந்தேகநபர் அடையாள அணிவகுப்பில் இனம் காட்டப்பட்டார்

அண்மையில் கொலன்னாவ பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான இணைப்பாளருமான பாரத லக்ஷ்மன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் உத்தியோகபூர்வ மெய்பாதுகாவலரான அனுர துஸார டிமெல் என்ற பொலிஸ் காண்ஸ்டபிள் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

நேற்று கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் நீதிமன்றில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் சாட்சியான டொன் பிரசன்ன சன்ஜீவ என்ற சாட்சியால் இவர் அடையாளம் காட்டப்பட்டார்.

இதனை தொர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விடயம் தொடர்பான இரசாயண பகுப்பாய்வு அறிக்கைகள் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக மன்றில் தெரியப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், குறிப்பிட்ட கொலையுடன் சம்பந்தமுடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவரும் கலபொட என்பவரது கடவுச் சீட்டினை முடக்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com