கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை துரிதமாக விநியோகிப்பதற்கு தபால் சேவைகள் அமைச்சு புதிய திட்டங்களை வகுத்துள்ளது.
கல்வி பொதுதராதர சாதரணதர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சையுடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்களையும் துரிதமாக விநியோகிப்பதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அனுமதி அட்டைகள் வழங்குவதில் நிலவிய பிரச்சினைகள் காரணமாக பரீட்சார்த்திகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய தி;ட்டங்கள் காரணமாக இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு பரீட்சார்த்திகளுக்கு உரிய ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களையும் துரிதமாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment