மீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .
இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீது அவுஸ்திரேலியாவில் போர்குற்ற வழக்கு ஒன்றினை தாக்கல் செய்ய முயன்று தோல்வியைச் சந்தித்துள்ள மீனா கிருஷ்ணமூர்த்தி எனும் பெண், முன்னணி எல்ரிரிஈ உறுப்பினர் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.மீனா கிருஷ்ணமூர்த்தி, எல்ரிரிஈ மகளிர் அணியின் மாலதி பிரிவின் இரண்டாம் நிலை உறுப்பினராக செயற்பட்டுள்ளதாக, இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எல்ரிரிஈ சர்வதேச செயற்பாடுகள் வலையமைப்பில் இணைந்து கொண்ட இவர், பல நாடுகளுக்கு சென்று, எல்ரிரிஈ தொடர்பான பிரசாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் செயற்படும் எல்ரிரிஈ யினரின் இடைக்கால அமைப்பான தமிழ் இளைஞர் அமைப்பின் தலைவியாக இவர் செயற்படுகின்றார்.
இராணுவ பயிற்சி பெற்றுள்ள மீனா கிருஷ்ணமூர்த்தி, 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம், மாலதி படைப்பிரிவில் செயற்பட்டுள்ளார். வேலுபிள்ளை பிரபாகரனுடனும் இவர் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாக, தெரியவந்துள்ளது.
இவரது கணவரும், எல்ரிரிஈ முக்கிய புள்ளியாகுமென, புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக குற்றம் சுமத்தி, 500 பக்கங்கள் அடங்கிய முறைப்பாட்டு புத்தகமொன்றை அவுஸ்திரேலிய றோயல் பொலிஸாரிடம் ஒப்படைத்ததன் மூலம், அவர் இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
2 comments :
see this site fro more details:
http://www.iamnotterrorist.com/Newspleasedontdes.php
meena pirabaharanudaia sinna veedu
Post a Comment