ஈரான் மீது அமெரிக்கா மற்றொரு தடை
ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஒடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது, அமெரிக்கா மற்றொரு பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இதற்கு, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் ஆதரவளித்துள்ளன. ஈரான் அணு ஆயுதங்களை தயார் செய்வதாக, சர்வதேச அணுசக்தி அமைப்பு சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, அந்நாட்டின் மீது, பல நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், மேலும், அந்நாட்டை தனிப்படுத்தும் விதமாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடா நாடுகள், மற்றொரு பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளன.
ஈரான் நாட்டு வங்கிகளுடன், எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது, ஈரான் நாட்டின் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துக்கு அளித்து வந்த தொழில் நுட்ப உதவிகள், உபகரணங்கள் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என, அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பொருளாதார ரீதியாக, ஈரான் தனிப்படுத்தப்படுவதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கிளின்டன் தெரிவித்துள்ளார். இந்த புதிய பொருளாதார தடைக்கான உத்தரவில், அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு, ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களுக்கு, இது முரண்பாடாக உள்ளதாக, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment