தாயிடமும் மகளிடமும் ஆபாசமாக நடந்து கொண்ட நபருக்கு பிணை
இரவு வேளைகளில் வாகனம் ஒன்றில் அமர்ந்திருந்த தாயையும் மகளையும் வாகனத்திலிருந்து வெளியே வரவழைப்பதற்காக ஆபாசமான முறையில் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை, நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு பிட்டிபனை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே பிணையில்; விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். வழக்கின் முறைப்பாட்டாளரான பெண் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு 12.30 மணியளவில் தனது கணவன் வரும் வரையில் நீர்கொழும்பு மாரிஸ் டெல்லா கல்லூரி முன்பாக தனது வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். சந்தேக நபர் அந்த வாகனம் அருகில் வந்து வாகனத்தின் மீது தட்டி அந்தப்பெண்ணிடமும் அவரது மகளிடமும் கைகளால் சைகை செய்து, தனது உடம்பின் சில பகுதிகளை திறந்து காட்டியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது .
முறைப்பாட்டாளரான பெண் கொப்பரா சந்தியில் கடமையிலிருந்த பொலிசாரிடமும் இது தொடர்பாக தெரிவித்துள்ளார் பின்னர் சந்தேக நபரை பொலிசார் கைது செய்த போது இருவரும் சந்தேக நபரை அடையாளம் காட்டியுள்ளனர்.
நீர்கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிசார் சந்தேக நபருக்கு எதிராக வழக்;கு தாக்கல் செய்துள்ளனா.; இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
0 comments :
Post a Comment