Thursday, November 10, 2011

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. கல்லடி பாலம் இன்றிரவு மூடப்படுகிறது

இலங்கையின் வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு இணைக்கும் கல்லடி பாலம் இன்று 10ம் திகதி இரவு 10 மணிமுதல் நாளை 11ம் திகதி அதிகாலை 4 மணிவரை மூடப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இப்பாலத்தின் அடியில்தான் மீன்கள் பாடிய வரலாறு உண்டு அதனால்தான் மட்டக்களப்பிற்கு மீன்பாடும் தேனாடு என பெயர்வந்தது என்பர்.

தற்போது புதிய பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம் பெற்று வருகின்றன. திருத்தப்பணிகள் காரணமாகவே இப்பாலம் மூடப்படப்படவுள்ளமை குறிப்படத்தக்கது. புதிய பாலம் 900 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

70 வருடங்கள் பழைமை வாய்நத இப்பாலம் ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டதாகும். பாலம் நிர்மாணிக்கப்பட்ட காலத்திற்குள் போக்குவரத்திற்காக மூடப்படுவது இதுவே முதல்தடவையாகும்.

ஜீனைட்.எம்.பஹத்

No comments:

Post a Comment