Sunday, November 6, 2011

சிலாபம் மெரவல பிரதேசத்தில் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சிலாபம் - மெரவல பகுதியில் இன்று பிற்பகல் பொலிஸாருக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. வாகன விபத்தின் பின்னர் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சட்ட நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்தே மெரவல பிரதேச மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன்போது கொடும்பாவி ஒன்றும் எரிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக சிலாபம் - கொழும்பு வீதியின் வாகனப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்தின் பின்னர் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்ன்ர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment