Tuesday, November 1, 2011

வைத்தியர் கொலையுடன் தொடபுடைய சந்தேக நபர்களின் வீடுகள் சொத்துக்கள் தீக்கிரை.

இராணுவக் கப்படன், இரு சிப்பாய்கள் கைது. நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு

கரந்தெனிய பொலிஸ் பிரதேசம் மற்றும் குறுந்தகஹாஹெத்தென்ம நகரம் ஆகிய பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் நிலவிய அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பி்ட்டள்ளார்.

கரந்தெனிய பகுதியில் பிரியங்க பிரசாத் ரணசிங்க என்ற பிரபல வைத்தியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான ஆய்வு கூடம் இயங்கிய கட்டடம் மீது கிராம மக்கள் தீயிட்டதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியை நாடியதாகவும் அமைதியின்மையை ஏற்படுத்தியவர்கள் கட்டடங்கள் சிலவற்றையும் சேதப்படுத்தியதாகவும், கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கரந்தெரினய பிரதேசத்தில் இடம்பெற்ற வைத்தியர் படுகொலைச் சம்பவத்தை இராணுவக் கப்டன் ஒருவர் திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தொழில் போட்டி காரணமாக மற்றுமொரு வைத்தியரினால் குறித்த இராணுவக் கப்டனிடம் கொலை தொடர்பான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.இராணுவக் கப்டன் கடமையாற்றி வரும் இராணுவ முகாமைச் சேர்ந்த இரண்டு படைச் சிப்பாய்களிடம், வைத்தியரை படுகொலை செய்யும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த படைச் சிப்பாய்கள் இருவரும் ரீ56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி வைத்தியரை படுகொலை செய்துள்ளனர். படுகொலை செய்வதற்கு ஆயுதங்களை இராணுவக் கப்டனே வழங்கியதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான வைத்தியர் மற்றும் இராணுவக் கப்டன் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்

கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவக் கப்டன் ஒருவரும், படைச் சிப்பாய்களும் இணைந்து வைத்தியரை திட்டமிட்டு ஒப்பந்த அடிப்படையில் படுகொலை செய்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. .

இதனை அடுத்து பிரதேசத்தில் இன்று அமைதியின்மை ஏற்படுள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் குறித்த வைத்தியரின் வீடும், அவரது தனியார் வைத்தியசாலையும் பொதுமக்களால் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்ம்பொருட்டு விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ள அதேநேரம் அமைச்சர் குணரத்னவீரகோன் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கடடுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகின்றார்.

No comments:

Post a Comment