Monday, November 14, 2011

ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து பாக்கிஸ்தான், ஆப்கான் அறிக்கை

பயங்கரவாதத்தை தோற்கடித்து, நாட்டை அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதியின் வழிகாட்டல்கள், பாராட்டத்தக்கவை. இதனை முன்மாதிரியாக கொள்ள நாம் தயாரென, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலைவர்கள், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். சார்க் உச்சிமாநாட்டை தொடர்ந்து இடம்பெற்ற அரச தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது, இவ்வாறான ஒரு அறிக்கை விடுக்கப்பட்டமை, மிக முக்கியமான அம்சமாக கருத முடியுமென, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், பயங்கரவாதத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாகும். விசேடமாக இவ்விரு நாட்டு தலைவர்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் இலங்கையின் அனுபவங்கள், வழிகாட்டல்களுக்கு, இவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயி, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலாணி ஆகியோர், ஜனாதிபதியின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை, பெரிதும் பாராட்டினர். சார்க் உச்சிமாநாடு உட்பட அரச தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள், இலங்கைகக்கு பெரிதும் பயன்மிக்கதாக அமைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை உட்பட தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்பட்ட கருத்துகளுடாக, இப்பயன்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment