Tuesday, November 1, 2011

அழகு கலைநிலையங்கள் மீதான சோதனைகள் ஆரம்பம்.

அழகு கலைநிலையங்கள் மீதான சோதனை இன்று முதல் நடைபெறவுள்ளது. தரமற்ற அலங்கார பொருட்கள் மற்றும் உபகரணங்களை கண்டுபிடிக்கும் பணிகள், இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென, தேசியஒளடதங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகம தெரிவித்தார்.

நாடெங்கிலும்உள்ள 5 ஆயிரம் அழகு கலை நிலையங்களில் சோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசியஒளடதங்கள் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவதன்மூலம், மக்கள் ஒவ்வாமைக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்காரணமாகவே, இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய ஒளடதங்கள் அதிகாரசபையின் பணிப்பாளர் ஹேமந்த பெனரகம மேலும் தெரிவித்தார்.

நீர் கொழும்பிலுள்ள அழகு கலை நிலையம் ஒன்றுக்கு சென்ற பெண்ணொருவர் அங்கு உயிரிரழ்ததை தொடர்ந்தே இந்நடவடிக்கை தீவிரமாகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment