Tuesday, November 8, 2011

“வரி” இழந்த புலிகளும் வாலறுந்த நரிகளும்! - மு.சிவானந்தன்

06 ஆம் திகதி ஞாயிறு மாலை இலங்கை தூதரகத்தினால் டொராண்டோ கொரியன் மண்டபத்தில் 2011 தீபாவளி கொண்டாட்டங்கள் இந்துமத பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பிரதம விருந்தினராக இலங்கை அமைச்சர் தோழர் வாசுதேவ நாணயக்கார கலந்து சிறப்பித்தார். அவருடன் இலங்கைக்கான கனடிய தூதர் புரூஸ் லெவியும், கனடாவின் தென்னாசிய பிராந்தியங்களுக்கு பொறுப்பான கனடிய அதிகாரியும் கனடாவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் மக்கள் பெரும்பானமையாக கலந்து கொண்டது சிறப்பான அம்சமாகும்.

லெஸ்லி வீதி தொடங்கும் வாயிலில் பதினைந்து அல்லது இருபது பேரளவில் "stop genocide" என்று எழுதப்பட்ட மட்டைகளுடன் நின்று கொண்டு உள்ளே வருபவர்களை "டேய்" என்று விழித்து தடுக்க முயன்று கொண்டிருந்தனர். புலிக் கொடிக்கு கல்தா கொடுத்திருந்த இந்தக் கூட்டம் கனடிய கொடிகளை பிடித்து கொண்டிருந்தனர்.

புலிகளின் வானொலிகளிலும், தொலைக்காட்சியிலும் பெரும் திரளாக வந்து எதிர்ப்பு தெரிவிக்கக் கோரியும் 15 -20 மாத்திரம் வந்தது கண்றாவியாக இருந்தது.

பின்னர் அவர்களில் நாலு கடுவன்களும், ஒரு பெட்டையும் மண்டபத்தினுள் நுழைந்து இருக்கைககளில் அமர்ந்து இருந்தனர். வந்த பெண் கமராவினால் சிலாவி சிலாவி படங்கள் எடுத்துக் கொண்டிருந்தாள். அவர்களை அடையாளம் கண்ட பல தமிழர்களில் சிலர் "படம்தானா எடுக்கிறாய், எடு மகளே" என்று எழுந்து நின்று "போஸ்" கொடுத்தது நல்ல பதிலடியாக இருந்தது. அவர்களில் சிலர் கனடாவில் புலிகளைத் தடை செய்யாத காலத்தில் புலிகளின் உலகத் தமிழர் அலுவலகத்துக்கு முன்னால் "புலிகளின் அராஜகம் ஒழிக" என்று மட்டை பிடித்து உண்டியல் புலிகளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய கீதங்கள் பாடப்படும் பொழுதும் இந்து சமய பூஜைகள் நடை பெறும் பொழுதும் இந்த கடதாசிப் புலிகள் எழுந்து நிற்காது காலின் மேல் கால் போட்டுக் கொண்டு தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தது பலருக்கும் எரிச்சலை உண்டாக்கியது. அதனை அவதானித்த வெள்ளை பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களுக்குப் பக்கத்திலேயே போய் நின்று கொண்டார். அவர் இவர்களின் "சேட்டைகளை" அவதானித்து வந்து ஒரு கட்டத்தில் அவர்களை வெளியேறுமாறு கோரிய பொழுது "மாட்டோம்" என்று அடம் பிடித்து அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரையே தாக்க முயற்சித்த பொழுது அவர் "கறளையில்" பிடித்து தூக்கிக் கொண்டு போய் அவர்களில் ஒருத்தனை வெளியே எறிந்தார்.

அப்பொழுது அந்த கேடிகள் அதிகளவில் பாவித்த வார்த்தைகள் "dont touch me, fu..k" என்பனவையே. தெருவில் நின்று ஊழையிட்டுக் கொண்டிருந்த அந்தக் கும்பல் போலீசார் வருவதைக் கண்டவுடன் மட்டைகளையும் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்களை படம் பிடித்த பலர் அவர்களின் படங்களைப் பொலிசாரிடம் கொடுத்துள்ளனர். அந்தக் கும்பல் உருத்திர குமாரனின் கும்பல் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

மூன்று நான்கு நிமிடங்கள் சபையின் பின் புறத்தில் நடந்த இந்த ரகளையால் விழா பாதிக்கப்படவில்லை என்பதும் நிகழ்வுகள் கனஜோராக நடத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பல தமிழர்களினதும் கவனத்தை ஈர்த்தவர் பாதிரியார் பிரான்சிஸ் சேவியர். இதுவரை காலமும் புலிகளின் ஆர்ப்பாட்டங்களில் முன் வரிசையில் நின்ற இந்த பாதிரியாரைக் கண்டதும் பல தமிழர்கள் மூக்கில் விரலை வைத்தனர். "நாங்கள் புலிக் கூட்டத்துக்கு வந்து விட்டோமா" என்று இன்னொருவர் முறுவலித்தார். பாதிரியார் திருநீற்றுக் குறியுடன் அங்கும் இங்கும் ஓடித் திரிந்ததை பலர் வியப்புடன் நோக்கியிருந்தனர்

இறுதியில் இட்லி, வடை, சாம்பார், சட்னி, லட்டு, தேநீர் என்று சுவையான உணவுகள் வழங்கப்பட்டிருந்தன. வந்தவர்கள் பலரும் சந்தோஷமாக "ஒரு பிடி" பிடித்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. தோழர் மணியமும், நானும், இன்னும் சில சலரோக உபாதை உள்ளவர்களும் "ஒரு நாளைக்குத்தானே" என்று சமாதானப்படுத்திக் கொண்டு உணவு வகைகளை ஒரு பிடி பிடித்தோம்.









3 comments :

Anonymous ,  November 8, 2011 at 2:27 PM  

I was there when the incident took place.It is shame to our tamil community. The deepawali celebration was great success. Those who were protesting tried to block and using bad words to the people who are going to the function .Canada is respecting the freedom of an individual. If the protestors are having the freedom to protest without violence I am having the freedom to attend. Further it is not a political meeting.It was a religious function bring reconciliation between tamils and sinhalese.
The canadian government should take serious action on this incident. Otherwise there will vilolent incidents may take place in future.

Anonymous ,  November 8, 2011 at 5:47 PM  

While reading the news,we do learn it's a load of tosh and poisonous
ideology backed by some elements in
order to go with the stupid protests for ever and ever
which makes them to fill their stomach and to have a luxury life.This kind of silly protests
nothing more than a waste of space.
We wonder why the canadian government just ignore the treacherous behaviour of these guys.Are they more democratic than any other countries around the world? because the westerners are the preachers of democracy around the world.......!

Anonymous ,  November 9, 2011 at 3:59 PM  

நான் ஒருவருக்கும் சார்பானவன் அல்ல. ஓன்று மட்டும் உண்மை யாதெனில் கனடாவில் பல வானரக் கூட்டம் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் திருந்தியதாக இல்லை. வானரங்களுக்கு சுயபுத்தி என்பது அறவே இல்லை.
எவரும் உசுப்பு எத்தி விட்டால் போதும் கூட்டம் தங்கள் குரங்குச் சேட்டைகளை தொடங்கிவிடும்.
ஒத்து மொத்த தமிழினத்தின் மானம் மரியாதை உலக காற்றில் பறந்ததும், தமிழனை உலகம் கணக்கில் எடுக்காததும் காரணம் இப்படியான கீழ்த்தரமான செயல் பாடுகளும், குறுகிய சிந்தனைகளுமே.
சிலதுகளுக்கு தமிழ் தெரியாது, ஆனால் தமிழ் குரங்குச் சேட்டைகள் நன்றாக தெரியும். படிப்பைவிட பண்பாடு தான் முக்கியம் இனியாவது திருந்துங்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com