நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது வாகன விபத்து இன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு - காலியை ஒரு மணித்தியாலத்தில் இணைக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ என்ற இடத்தில் கார் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
மிக வேகமாகச் சென்ற கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த இருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment