Monday, November 14, 2011

அலுகோசு பதவிக்கு மூன்று பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அலுகோசு பதவிக்கு 100 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், இதில் மூன்று பெண்களின் விண்ணப்பங்களும் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பங்கள் இதுவரை கோரப்படாத நிலையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் அத்திணைக்களம், கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்கள் கசாப்பு கடையில் தொழில்புரிந்த ஒருவரின் விண்ணப்பமும் கிடைக்கப்பெற்றுள்ளது. தான், இறைச்சி வெட்டும் தொழிலில் நீண்டகாலம் ஈடுபட்டிருப்பதாகவும், தனக்கு இப்பதவியை பெற்றுத்தருமாறும், விண்ணப்பதாரி கோரியுள்ளார்.

இலங்கையில் 1976 ஆம் ஆண்டுக்கு பின்னர், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இதுவரை மரண தண்டனை விதியாக்கப்பட்டு, 357 பேர் சிறைச்சாலைகளில உள்ளனர். இவர்கள், வெலிகட மற்றும் போகம்கர சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அலுகோசு பதவிக்கு இரண்டு வெற்றிடங்கள் மாத்திரமே காணப்படுகின்றன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் மூலம், 80 சதவீதமானவர்கள், மரண தண்டனையை மீண்டும் அமுல்ப்படுத்துவதற்கு, விருப்பம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment