Tuesday, November 1, 2011

சிறந்த சந்தைகளுக்கான உலக விருதைப் பெறுகின்றது இலங்கை

உலகில் சிறந்தசந்தை செயற்பாடுகள் மற்றும் சேவை வழங்கும் நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைக்கப் பெற்றுள்ளது. உலகில் வெளிப்புற சேவைகளை வழங்கும் நாட்டை தெரிவு செய்வதற்கான விருது வழங்கும் விழா, எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை, லண்டனில் நடைபெறவுள்ளது. எகிப்து, போலந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும், இவ்விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உலகில் உள்ள 500 சந்தைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்து, இந்நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த வர்த்தக செயற்பாடுகள் மற்றும் சேவைவழங்குதல் தொடர்பாக, இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com