ஆப்கனில் இந்தியா நன்றாக விளையாடுகிறது: முஷாரப்
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அங்கு இந்தியா நன்றாக விளையாடி வருகிறது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் குற்றம்சாட்டியுள்ளார். 2014-க்குள் ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன்பின்னர் அங்கு ஆதிக்கம் செலுத்தலாம் என இந்தியா முயற்சித்து வருகிறது. அதற்கேற்றவாறு ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயும் இந்தியாவுடன் நெருங்கி வருகிறார் என முஷாரப் கூறினார்.
இந்தியாவில் பயிற்சி மேற்கொள்வதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து தூதரக அதிகாரிகள், உளவுத்துறையினர், ராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் என அனைவரும் செல்கின்றனர். ஆனால் இதேபோன்று நாங்களும் பயிற்சி அளிக்கிறோம் என்று பாகிஸ்தான் கூறினால் அதை வேண்டாம் என்று மறுக்கின்றனர்.
இதைவைத்துதான் இந்தியாவுடன் ஆப்கன் நெருங்கி வருகிறது என்கிறேன் என முஷாரப் குறிப்பிட்டார். ஆப்கன் அதிபர் கர்ஸாயை முழுமையாக நம்பாவிட்டாலும், சமீபத்தில் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தெரிவித்த கருத்துகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் அவர் கூறியவாறு பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் எனக் கூறுவது முட்டாள்தனமான கற்பனை என முஷாரப் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment