வாக்காளர் பதிவு தொடர்பில் இறுதி சந்தர்ப்பம்.
வாக்காளர் இடாப்புக்களை மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தும் திகதி எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. 2011 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை பதிவு செய்ய முடியாத வாக்காளர்கள் இக்காலப்பகுதியினுள் தமது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் இடாப்பிலிருந்து நீக்கப்படும் பெயர்கள் கிராம சேவகர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்படுமென பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு நீக்கப்படும் பெயர்கள் தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் அதனை தெரிவிப்பதற்கும் வாய்ப்புகள் ஏற்படுகிறது.
இது தொடர்பாக உரிய அவதானம் செலுத்தி வாக்களிக்கும் உரிமையை பாதுகாப்பதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பெவ்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment