நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுமாம்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தொகுத்தமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் எழுத்து மூல மற்றும் வாய்மூல சாட்சியங்களை ஆணைக்குழு ஏற்கனவே பதிவு செய்திருந்தது.
ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment