இன்று சர்வதேச கடற்றொழில் தினம்
இன்று சர்வதேச கடற்றொழில் தினமாகும். சர்வதேச கடற்றொழில் தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
சர்வதேச கடற்றொழில் தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய தினத்தில் இலங்கையை சூழவுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடி தொழில் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது.
2009 ஆம் வருடம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 730 மெட்ரிக் தொன்னாக காணப்பட்ட மீன் உற்பத்தி கடந்த மாதமளவில் 4 இலட்சம் மெட்ரிக் தொன்னை தாண்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டளவில் வட கிழக்கின் மீன் உற்பத்தியை நூற்றுக்கு 43 வரை அதிகரிப்பதே நோக்கமாகும்.
ஆழ்கடல் மீன் உற்பத்தியை நூற்றுக்கு 194 வீதமாகவும், நன்னீர் மீன் உற்பத்தி நூற்றுக்கு 100 வீதமாகவும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நன்னீர் மற்றும் கடற்றொழில் மீன் பிடி மூலம் உற்பத்தி செய்யப்படும் 46 ஆயிரத்து 560 மெட்ரிக் தொன் மீன் உற்பத்தியானது 2013 ஆம் ஆண்டளவில் 6 இலட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்குமென கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment