இந்தியாவில் கம்பி எண்ணும் உமேஷ் தொடர்பாக கனடிய பொலிஸாருக்கு அறிக்கை.
கடனட்டை மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட உமேஷ் பாலரவீந்திரன் அல்லது சூட்டி என்பவருக்கு பிணை வழங்கினால், அவர் நாட்டை விட்டு தப்பியோடலாமென, சென்னை பொலிஸார், கனேடிய பொலிஸாருக்கு அறிக்கை சமர்பிக்க, திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையரான உமேஷ் சென்னையிலிருந்து கனடா சென்றுள்ளதுடன் 6 வருடங்களுக்கு முன்னர் அங்கிருந்து குற்றமொன்றின்பேரில், அங்கிருந்து வெளியேற்றப்பட்டவாரார். கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 60 பேருடமிருந்து கடனட்டை மோசடி மூலம் 32 லட்சம் ரூபாவை, இவர் கையாடியுள்ளதாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவருக்கு பிணை வழங்கப்பட்டால், அவர் மீண்டும் கனடாவுக்கு சென்று விடலாமென, தமிழ் நாடு பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள உமேஷ், பிறிதொரு கடவுச்சீட்டின் மூலம் சென்னையிலிருந்து கனடாவுக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, கனடாவில் அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். சென்னையில் அவர் பேரூரில் தங்கியிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
உமேஷ் வழங்கிய வாக்குமூலத்தில் தான் கனடாவில் குடியேற தீர்மானித்துள்ளதாக, தெரிவித்திருந்தார். அவர் இங்கிருந்து வெளியேறினால், அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதில் சிரமங்கள் ஏற்படுமென்றும், தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர், இரண்டு கடனட்டை மோசடி வழக்குகளையும், எதிர்கொண்டுள்ளார். நாம் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளோம். ஆனால் அவர் போலி பயண ஆவணங்கள் மூலம், தமிழகத்திலிருநது தப்பிவிடலாம். அவர் அவ்வாறு சென்றால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான அழைப்பாணையை எம்மால் வழங்க முடியாமல் போகுமென்றும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாம் இன்டர்போலூடாக, கனடா அரசாங்கத்தை தொடர்ப்பு கொண்டுள்ளோமென, தமிழ்நாடு பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கடனட்டை மோசடியில் ஈடுபடுவதற்கு முன்னர் உமேஷ், கனடாவில் வீடியோ கடையொன்றை நடாத்தி வந்துள்ளார். குற்றச்சாட்டின் பெயரில் அவரை கைது செய்ததன் பின்னர், 2006 ஆம் ஆண்டு அவர் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பேரூரில் தங்கியிருந்து அவர் தொடர்ந்து கடனட்டை மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ்வாண்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை, பல்வேறு மோசடிகளில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார். அவரும், அவரது சகாக்களும், கடனட்டை மோசடி தொடர்பாக, கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார், மனோஜ் குமார் என்பவர் தலைமையிலான மற்றுமொரு கும்பலையும் கைது செய்துள்ளனர். மனோஜ் குமார் தற்போது வெளிநாட்டில் தங்கியிருபபதாக, நம்பப்படுகிறது. அண்மையில் இரண்டு இலங்கை பிரஜைகள், கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில், திருச்சியில் வைத்து, கைது செய்யப்பட்டமையும், குறிப்பிடத்தக்கதாகும்.
...............................
0 comments :
Post a Comment