யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களை நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்.
யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
சமூக விரோத செயல்கள் தொடர்பாக தமிழ் மொழி மூலம் தெரிவிக்கக் கூடியதும் 24 மணித்தியாலங்களும் செயற்படக் கூடியதுமான தொலை பேசி இலக்கமொன்று யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மை காலமாக குற்றச் செயல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் அடிக்கடி இடம் பெறுவதாகவும் அவற்றை பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்காக பொலிஸாருக்குத் தேவையான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களை அடுத்த வருட முதல் ஆறு மாத காலப்பகுதியில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment