மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் மலை குகையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அம்பாரை அரந்தலாவ விகாரையில் பௌத்த பிக்குகளை படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களாக இவை இருக்கலாம் என ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ் பண்டார தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுள் டி 81 ரக 14 தன்னியக்க துப்பாக்கிகள் இருந்தாhக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உன்னிச்சை குளத்தருகிலுள்ள மலை குகையில் இத்துப்பாக்கிகள் பொதி செய்யப்பட்ட நிலையில் மறைத்து வைத்து மணலிட்டு மூடப்பட்டிருந்தன. கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இவை இங்கு வைக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர் இத்துப்பாக்கிகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் துருப்பிடித்துள்ளன.
No comments:
Post a Comment