அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்கக் கோரும் தனியார் துறையினர்.
முதலீட்டு சபையின் அனுமதியின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் குறைந்த பட்ச சம்பளத்தை , அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளமான 11 ஆயிரத்து 730 ரூபா வரை உயர்த்துமாறு நான்கு தொழிற்சங்கங்கள் முதலீட்டு சபையின் தலைவரிடம் கேட்டுள்ளன.
2012 ஆம் அண்டுக்கான சம்பள அதிகரிப்பின் போது அந்த வேதன உயர்வை வழங்குமாறும், அதற்கு மேலதிகமாக அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த வாழ்க்கை செலவு கொடுப்பனவான 5750 ரூபாவையும் தங்களுக்கும் வழங்குமாறும் அந்த தொழிற்சங்கங்கள் கேட்டுள்ளன.
அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்த பட்ச சம்பளத்தின் வித்தியாசம் 10,216 ரூபா எனவும், அந்த வித்தியாசம் தனியார் துறை ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளத்தை விட அதிகம் எனவும் அந்த தொழிற்சங்கங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
0 comments :
Post a Comment