இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா கார்டியன் இணைய தளத்தின் செய்தி ஆசிரியரான நிலந்த இலங்கமுவ, இந்திய உற்துறை உளவு பிரிவின் தலைவராக செயற்பட்ட கிருஷ்ண மலோயி தஹரை புது டில்லியில் சந்தித்துள்ளார். அவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை பல மணி நேரம் நீடித்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பு உளவு பிரிவின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் மற்றொரு இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவரும் கலந்து கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
மலோயி கிருஷ்ணா அந்நாட்டு உற்துறை உளவு பிரிவின் தலைவராக சில காலம் பணியாற்றியுள்ளதாகவும் அவர் தெற்காசிய பாதுகாப்பு மற்றும் உளவு துறை நிபுணராகவும் செயற்பட்டுள்ளார். அத்துடன் ஷஓப்பன் சீக்ரட்| போன்ற பல நூல்களை எழுதியுள்ள அவர் எல்ரிரிஈ அமைப்பு மற்றும் பிரிவினை வாதத்தில் கூடிய கரிசனை காட்டியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
...............................
No comments:
Post a Comment