லக் விஜய அனல்மின் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ காரணமாக நிலையத்திற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென மின்சக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அவசர நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள புத்தளம் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாகவும், நிலையத்தின் பிரதி பொது முகாமையாளர் சாலிய பண்டித்தரட்ண தெரிவித்துள்ளார்.
நிலையத்தின் அனல் இயந்திரமொன்றில் ஏற்பட்ட சிறு தீச்சம்பவம் காரணமாக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
நிலக்கரிகளை கையாளும்போது, ஏற்படுகின்ற அதிக உஷ்ணம் காரணமாகவே, இந்த தீ ஏற்பட்டுள்ளதாக திட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட தீ, ஏனைய இயந்திரங்களுக்கும் பரவும் அச்சுறுத்தலை தடுக்கும் வகையிலேயே, மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள், இடைநிறுத்தப்பட்டன. இந்த தீ சம்பவத்தினால் மின் உற்பத்தி நிலையத்திற்கோ, மின் உற்பத்தி இயந்திரங்களுக்கோ, எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென, இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம் பெறுகின்றன./span>
No comments:
Post a Comment