அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு
2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையில் ஊடகவியலாளர்களின் நலன்களை பேணுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி ஒதுக்கீடு செய்துள்ளமைக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஜனபாதிபதிக்கு
சம்மேளனத்தின் தலைவர் மீரா . எஸ் இஸ்ஸதீன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
ஊடகவியலாளர்கள் தங்கள் ஊடகப் பணியை முன்னெடுப்பதற்கு பல்வேறுபட்ட கஸ்டங்களையும், இன்னல்களையும் , சவால்களையும் எதிர்நோக்குகின்றனர். இதனால் தங்களின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைகின்றனர் . அதே போன்று இலஞ்சம் ஊழல் போன்ற விடயங்களை வெளிக்கொண்டு வருகையில், சம்பந்தப்பட்டவர்களின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு உயிர் ஆபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் ஊடகவியலாளர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் நலன்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதற்கு ஊடகவியலாளர்கள் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment