Thursday, November 10, 2011

மாவீரர் தின சுவரொட்டிகளை விசமிகள் கிழிக்கிறார்களாம்.

புலிகளால் வருடாவருடம் மாவீரர் தினம் எனும் பெயரில் கடந்த இரு தசாப்பதங்களாக வசூலிப்பு இடம்பெற்று வருவது யாவரும் அறிந்தது. புலிகளின் தலைமை முள்ளிவாய்காலில் மண் கவ்விய பின்னர் அவ்வமைப்பின் புலம்பெயர் வால்கள் சொத்துக்களுக்காக பல பிரிவுகளாக நின்று அடிபடுவதும் யாவரும் அறிந்த விடயமே. இந்நிலையில் இவ்வாண்டிற்கான மாவீரர் தின அறிவிப்புக்கள் வெவ்வேறு வகையான சுலோகங்களுடன் , வெவ்வேறு வியாபாரிகளால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இப்பிரசுங்களின் பின்னணியில் தொலைபேசி மிரட்டல்கள், வாள்வெட்டு , கத்திக்குத்து, குழுக்களை வைத்து இருட்டடி என ஏகப்பட்ட செய்திகள் நாள்தோறும் காதுகளை எட்டுகின்றது, அத்துடன் நேற்று பிரண்ஸ் நகரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் யாவற்றையும் குழு வொன்று பட்டப்பகலில் கிழித்தாக அறியமுடிவதுடன், இப்பிரசுரங்கள் விசமிகளால் கிழிக்கப்பட்டதாக பெண்ணொருவர் இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்விசமிகள் யார் என எமது பிராண்ஸ் செய்தியாளர் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த கடைக்காரர்களிடம் வினவியபோது, விசமிகள் யாருமல்ல விசமிகள் தான் விசமிகளின் சுவரொட்டியை கிழிக்கிறார்கள் எனவும், ஒட்டுபவர்கள் , கிழிப்பவர்கள் யாவரும் பிளவு பட்டு நிற்கும் விசமிகளே எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் இப்போது நோட்டீஸ் ஒட்டவேண்டாம் என்று சொல்லவோ, அன்றில் ஒட்டிய நோட்டிஸை கிழிக்கவோ தமக்கு தேவையில்லை எனவும் அந்த இரண்டையும் அவர்களே செய்து கொள்கின்றனர் எனவும், மற்றவர்கள் நோட்டீஸ் ஒட்டமுடியாதவாறு ஒரு பகுதியினர் தமது கடைகளுக்கு காவல் போட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் அவ்வாறு ஒருவரும் இல்லாத நேரம் பார்த்து ஒருதரப்பு ஒட்சிச் சென்றுவிட்டாலும் மறுதரப்பு உடனடியாக வந்து கிழித்து விடுகின்றது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மாவீரர் தினம் என்ற பெயரில் அரங்கேறும் பணவசூலிப்பின் பின்னால் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றது, அத்துடன் இம்முறை இந்நிகழ்வுகளின்போதும் பாரிய வன்செயல்கள் நடைபெறலாம் என ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

1 comment:

  1. ஓன்று மட்டும் உண்மை அன்றிலிருந்து இன்றுவரைக்கும் வானரக் கூட்டம் திருந்தியதாக இல்லை. வானரங்களுக்கு சுயபுத்தி என்பது அறவே இல்லை.
    எவரும் உசுப்பு எத்தி விட்டால் போதும் கூட்டம் தங்கள் குரங்குச் சேட்டைகளை தொடங்கிவிடும்.
    ஒத்து மொத்த தமிழினத்தின் மானம் மரியாதை உலக காற்றில் பறந்த காரணம் இப்படியான வானரக் கூட்டம் என்பதை உலகறியும்.
    இப்போ வானர கூட்டதிகுள் குழப்பம்.
    மக்களுக்கு ஓரளவு நிம்மதி.

    ReplyDelete